வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு கிராமம் உள்ளது. இங்கு சாதிக் பாஷா என்பவர் வசித்து வருகிறார். நேற்றுஅவர் வேலைக்கு காலையில் கிளம்பி சென்றுள்ளார். பிள்ளைகள் பள்ளிக்கு சென்றுள்ளனர். வீட்டில் அவரது மனைவி சபானா மட்டும் இருந்துள்ளார்.

Advertisment

robbery

ஜீன் 20ந்தேதி மதியம் சாதிக்பாஷா வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அவரது மனைவி சபானாவிடம், கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர் இருவர்.

Advertisment

இதுப்பற்றி அவர் உடனே தனது கணவருக்கு தகவல் சொல்லியுள்ளார். அவர் தனது மனைவியை உமராபாத் அழைத்து சென்று காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார். பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகையை பறிக்கும் அளவுக்கு திருடர்கள் வந்துயிருப்பதை கேள்விப்பட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து உமராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment