Advertisment

தூங்கிய தம்பதி! பீரோவோடு தப்பிய திருடர்கள்! 

 Thieves who escaped with the bureau!

திருச்சி மாவட்டம், மணப்பாறை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(38). இவர், டி.என்.பி.எல். பொதுத்துறை நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெயப்பிரியா, மணப்பாறை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Advertisment

இவர்கள் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் உள் அறையில் படுத்து தூங்கியுள்ளனர். அப்பொழுது அவர்கள் வீட்டினுள்ளே நுழைந்த திருடர்கள், மணிகண்டன் உறங்கிக்கொண்டிருந்த அறையை பூட்டிவிட்டு, மற்றொரு அறையில் இருந்த பீரோவை வீட்டிற்கு வெளியே உள்ள கருவேலம் காட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு வைத்து பீரோவை உடைத்து அதில் இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ.3000 மதிப்புள்ள வெள்ளி பிள்ளையார், 1000 ரூபாய் பணம், ஆவணங்கள் உள்ளிட்டவைகளை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மணப்பாறை காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisment

police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe