வேலூர் மாவட்டம் காட்பாடி, தாராபடவேடு சித்தூர் வேலூர் நெடுஞ்சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் சுரேஷ் குமார். இவர் வங்கியில் செலுத்துவதற்காக 5 லட்ச ரூபாய் எடுத்துக்கொண்டு அக்டோபர் 5ந்தேதி காலை கடையில் இருந்து எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளார். அப்போது ஹெல்மெட் அணிபடி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சுரேஷ்குமார் கையில் வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு வண்டியில் வேகமாக சென்றுள்ளனர்.

Advertisment

thieves wearing helmets in Vellore again!

தனது பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு போகிறவர்களை பார்த்து கத்தியும் அவர்களை பிடிக்க முடியவில்லையாம். இதுப்பற்றி காட்பாடி காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை வேலூர் மாவட்டத்தில் பலயிடங்களில் ஹெல்மெட் அணிந்தபடி, இருசக்கர வாகனத்தில் வரும் கொள்ளையர்கள் பெண்களின் தங்கதாலி சரடு, செயின் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றனர். கடந்த சில மாதங்களாக அந்த பிரச்சனை இல்லாமல் இருந்துள்ளது. தற்போது இப்போது ஒருவரிடம் வந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதை பார்க்கும்போது, மீண்டும் அவர்கள் வேலூர் மாவட்டத்துக்குள் வந்துள்ளார்களோ என சந்தேகிக்க தோன்றுகிறது.