Skip to main content

திண்டுக்கல் பூட்டை உடைக்கமுடியாததால் தாடிக்கொம்பு கோவில் உண்டியல்களையே தூக்கிச்சென்ற திருடர்கள்!

Published on 14/08/2018 | Edited on 14/08/2018

 

tha


திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பில் பிரபல சவுந்தரராஜா பெருமாள் கோவில்  உள்ளது. இக்கோவில்  பழமை வாய்ந்த  பிரசித்த பெற்ற கோவில்  என்பதால் திண்டுக்கல் மற்றும்  மாவட்ட அளவில் உள்ள பக்தர்களும் இக் கோவில்லுக்கு பெரும் திரளாக வருவார்கள். அது போல் வெளியூர்களிலும் இருந்தும்  பக்தர்கள் வந்து  பெருமாளை தரிசித்து விட்டு போவார்கள்.


          இந்த நிலையில் தான் கோவிலில்  பக்தர்களின் காணிக்கைக்காக 19 உண்டியல் வைக்கப்பட்டுள்ளது . இதில் கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டாள், சவுந்திரவள்ளிதாயார், லட்சுமிநரசிம்மன் சன்னதிகள் முன் வைக்கப்பட்டு இருந்த  மூன்று உண்டியல்களையும் கோவில் சுவர் ஏறி குதித்து  திருடர்கள் தூக்கி சென்று விட்டனர்.

 

th


        அதிகாலையில் வழக்கம் போல் கோவிலை திறந்து பார்த்த போது தான் அந்த  சாமிகள் முன் வைக்கப்பட்டு இருந்த  உண்டியல் காணமல் போனதை கண்டு போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்த  போது மூன்று திருடர்கள் முகமூடி அதாவது முகத்தில் கருப்பு துணியை கட்டி கொண்டு கோவிலில் பின் புறம் சுவர் ஏறி குதித்து வந்து  உண்டியலினை உடைத்து இருக்கிறார்கள். ஆனால் அந்த உண்டியல்களுக்கு திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டி இருப்பதால் அந்த முக மூடி திருடர்களால் பூட்டை உடைத்து பணத்தை திருடமுடியவில்லை. அதனால் டென்ஷனான திருடர்கள் உண்டியலையே தூக்கி கொண்டு போய் இருப்பதாக ஆய்வு மூலம் தெரியவருகிறது. அதை தொடர்ந்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து  உண்டியல் திருடர்களை தேடி வருகிறார்கள். இச் சம்பவம் திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்