Advertisment

திருச்செங்கோடு கோயில் உண்டியல்களில் கொள்ளையர்கள் கைவரிசை 

ko

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது சீதாராம் பாளையம். இங்கு பெருமாள் மற்றும் மாரியம்மன் கோயில்கள் உள்ளது. இரண்டு கோயில்களிலும் மூன்று உண்டியல் இருந்துள்ளது. உண்டியல்களில் பக்தர்கள் போடும் காணிக்கைகளை மூன்று மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் திறந்து எண்ணுவது வழக்கம்.

Advertisment

இன்று காலை வழக்கம் போல் கோயிலுக்கு மக்கள் வந்து சென்றனர். அப்போது மதியம் உண்டியலை கவனித்த ஒரு பக்தர் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போய் அங்குள்ளவர்களிடம் கூறினார். மூன்று உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் திருடியுள்ளது தெரிய வந்தது. சுமார் 1 லட்சம் ரூபாய் உண்டியல் பணம் கொள்ளை போயுள்ளதாக கூறப்படுகிறது. திருச்செங்கோடு போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.

Advertisment
raabery kovil namakkal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe