vThieves involved in theft  at temple ceremony!

திருச்சி மாவட்டம், மணப்பாறை வீரப்பூர் பொன்னர்சங்கர் கோவில் திருவிழா கடந்த 6ஆம் தேதி முதல் விமரிசையாக கொண்டாடாப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தை பயன்படுத்தி வீரப்பூர் படுகளம் பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட்டு அடிக்கும் திருட்டு கும்பல் உள்ளே புகுந்து தங்களுடைய கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளது.

Advertisment

அதில் நேற்று ஒரு நாள் மட்டும் திருவெறும்பூர் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (29), திருப்பூர் பொங்களுரைச் சேர்ந்த முனுசாமி (32) ராஜன் (60), ராம்ஜிநகா் கொத்தமங்களம் சரவணன் (32), பெரியசாமி (35), முசிறி வடமல்லிபட்டியைச் சோ்ந்த சதீஷ் குமார் (23) உள்ளிட்டவர்கள் இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கேட் அடித்துள்ளனர். இவா்களை காவல்துறையினா் கையும்களவுமாக பிடித்து அவா்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.

Advertisment