/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cop_94.jpg)
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உட்கோட்ட பகுதிகளில் நடந்து வந்த தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாகமைலம் மற்றும் ஒலக்கூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
மேற்படி குற்ற வழக்குகளை பார்வையிட்ட விழுப்புரம் சரக காவல் துணை தலைவர் பாண்டியன் ஐ.பி.எஸ். மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோரின் உத்தரவின் பேரில் திண்டிவனம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மயிலம் ஆய்வாளர் கிருபாலட்சுமி, ஒலக்கூர் காவல் உதவி ஆய்வாளர் தமிழ்மணி, உள்ளடக்கிய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தத் தனிப்படை காவல்துறையினர், மைலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மைலம் இன்ஜினியரிங் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகில் 20.8.2021ஆம் தேதி இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கருப்பு நிற ஹோண்டா சிட்டி காரை நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால், அந்த வாகனத்தை ஓட்டிவந்தவர்கள், வாகனத்தை நிறுத்தாமல் சென்றனர். அதனைத் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வாகனத்தை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் பிடிப்பட்டவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், மைலம் மற்றும் ஒலக்கூர் ஆகிய பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களை செய்ததை ஒப்புக்கொண்டனர். மைலம் இதில் சிக்கியவர்கள், மகேந்திரன் வயது 39, புரோஸ்கான் யாசர் வயசு 27, மதுபாலன் வயது 27, ஆனந்தகுமார் வயது 23, விஜய் பாண்டி வயது 20, ஏழுமலை வயசு 47, குமார் வயது 38, சக்திவேல் வயது 47 ஆகியோர் எனத் தெரியவந்தது.
மேலும் சிக்கியவர்களிடமிருந்து 26 1/2 சவரன் தங்கம், வெள்ளி 1 கிலோ ஆகியவை மீட்கப்பட்டது. மேலும் திருட்டிற்கு ஈடுபடுத்தப்பட்ட கார் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றி குற்றவாளிகளை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)