
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட நடுகொண்டையன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (65). இவர் வழக்கம்போல் வீட்டு வாசலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு திருடர்கள் அவர் வைத்திருந்த பணத்தைப் பறித்துக்கொண்டதோடு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இருப்பினும் அவர்களைப் பிடிக்க முயன்ற மனோகரனை அவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது பிடித்து தள்ளியதில் பலத்த காயமடைந்துள்ளார்.
அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் லாரியில் கல்லைக் கட்டி டயரை திருடிக்கொண்டு செல்லும் திருட்டு கும்பல் அதிகளவில் ஈடுபட்டதால், அப்பகுதியில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவில் நேற்று (05.09.2021) நடந்த கொலை சம்பவம் பதிவாகியுள்ளது. அதை வைத்து தற்போது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து அந்த மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.