Advertisment

ஆம்பூரில் நூதன திருட்டில் ஈடுப்பட்ட ஆந்திர திருடர்கள் கைது!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் இந்திராநகர் பகுதியை சேர்த்தவர் சீனிவாசன். ராணுவ வீரரான இவரது மனைவி 43 வயதான நிர்மலா. கடந்த 19.9.2019 ந்தேதி இருசக்கர வாகனத்தில் ஆம்பூர் எஸ்பிஐ வங்கி மற்றும் கனரா வங்கி ஆகிய இரு இடங்களில் பின் தொடர்ந்து வந்து ஆம்பூர் எஸ்.பி.ஐ வங்கிக்கு மீண்டும் வந்தபோது அவரது கவனத்தை திசை திருப்பி வண்டியில் இருந்த 47 ஆயிரம் ரூபாய் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து சென்றது திருட்டு கும்பல்.

Advertisment

thieves arrested in ambhur

அந்த புகாரை வழக்காகபதிவு செய்து ஆம்பூர் போலிசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சி ஒன்றன் அடிப்படையில் அந்த சம்பவத்தில் தொடர்புள்ள ஆந்திர மாநிலம் ஓஜீகுப்பம் நகரி பகுதியே சேர்த்த மணிகுமார் ( வயது 41 ) சாலமன் (வயது 38), விஜயசந்திரன் (வயது 43 ) ஆகிய 3 பேரை கிருஷ்ணகிரி போலீஸார் வேறு திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவர்களை ஆம்பூர் டவுன் போலீஸார் கஸ்டடி எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.

arrest ambur police Theft
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe