Break the lock and loot the jewelry

Advertisment

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் அருகே உள்ள சின்னாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக கடந்த 23-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டுச் சென்ற ஐஸ்வர்யா, அங்கிருந்து நேற்று இரவு வீட்டிற்குத் திரும்பிய நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இனாம்குளத்தூர் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.