ADVERTISEMENT

தொடர் குற்றச் சம்பவம்; பலே திருடனைச் சுற்றி வளைத்த போலீஸ்

06:21 PM Mar 06, 2024 | ArunPrakash

வேலூர், காட்பாடி, திருவலம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போயுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே காட்பாடி ரயில் நிலைய பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் திருடு போனது தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து காட்பாடி டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், நேற்று திருவலம் கூட்ரோடு பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். மேலும் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவமும் இவரின் உருவமும் ஒன்றாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, பிடிபட்ட நபர் திருவலம் குகைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் (வயது 40) என்பதும், இவர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரிய வந்தது.

ADVERTISEMENT

அவரைக் கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 15 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT