கடைகளில் பூட்டை உடைத்து திருடிய பலே திருடன் கைது!

Bale thief arrested for breaking shop locks

சிதம்பரம் நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் கடைகளின் பூட்டை உடைத்து பல லட்சம் ரொக்கம் மற்றும் பொருட்களைத் திருடிய பலே திருடனை நகர போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் நாராயணன் தெரு, வடக்கு மெயின் ரோடு, வடக்கு ரதவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ரூ.1 லட்சத்திற்கு மேலான ரொக்கம் மற்றும் செல்போன்கள் உள்ளிட்ட பொருள்கள் சமீபத்தில் தொடர்ந்து திருடு போனது. இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் உத்தரவின் பேரில் நகரக் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் திருடுபோன பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வந்தனர். இந்நிலையில் சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ் (35) என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேற்கண்ட கடைகளில் பூட்டை உடைத்து ரொக்கம் மற்றும் பொருள்களைத் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து ராஜேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

police
இதையும் படியுங்கள்
Subscribe