"என்னை எதிர்த்துப் பிரபலமாக நினைக்கிறார்கள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! 

publive-image

கரூர் மாவட்டம், திருமாநிலையூரில் இன்று (02/07/2022) காலை 11.30 மணிக்கு நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்றதிட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன், பொதுமக்களுக்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கரூர் மாவட்ட ஆட்சியர், துறைசார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கரூர் மாவட்டம், திருமாநிலையூரில் ரூபாய் 47 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் ஜவுளி காட்சியரங்கம், ஜவுளி பொருட்கள் பரிசோதனை அமையம் அமைக்கப்படும். அரைவேக்காடு விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதில்லை. நானும் இருக்கிறேன் என்பதைக் காட்ட வாந்தியெடுக்கும் அளவுக்கு பேட்டி தருவோருக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. மானத்தைப் பற்றி கவலைப்படாத மனிதர்களின் விமர்சனத்தை மதிப்பதில்லை. தி.மு.க. ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண முடிகிறது. நான் நினைப்பது மட்டும் நடக்க வேண்டும் என நினைப்பவனில்லை நான். என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் மூலம் பிரபலமாக நினைப்பவர்களைப் பார்த்து வருத்தப்படுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Speech Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe