Advertisment

“ஒருமுறை நான் டெல்லிக்குப் போகும்போது விமான நிலையத்தில்...” - சீமான்

“They sing as the Maharasah who came with the drums” – Seeman

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பிரபாகரன்பிறந்தநாள் விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

Advertisment

அப்போது பேசிய அவர், “இரண்டு படம் நடித்துவிட்டால் போதும் தலைவா வா என்கிறார்கள்.தமிழ்நாடு உனக்குக் காத்திருக்கிறது என்பார்கள். எங்கு காத்திருக்கிறது. உடனே நாடாள வந்த மகராசா என்று பாடுகிறார்கள். இது தமிழ்நாடா? இல்லை தரிசுக் காடா?

Advertisment

தமிழின மக்கள் ஒன்றானால் நமது வாழ்வு பொன்னாகும். இல்லை என்றால்மண்ணாகும். நீங்கள் சாதி, மத உணர்ச்சிகளை பின்னுக்குத் தள்ளி தமிழர் என்பதை முன்னிறுத்தி முன்னேறி வரும் பொழுது தான் நாம் வெல்ல முடியும். சோர்ந்து பின்னடையாமல் சேர்ந்து முன்னேறுவோம். அதுதான் நமக்கு இருக்கும் இறுதி வாய்ப்பு.

நானும் என் தம்பியும் டெல்லிக்குப் போனோம். விமான நிலையத்தில் நான் மட்டும் முன்னாடி தனியாக சென்று கொண்டிருந்தேன். திடீரென்று என்னைச் சுற்றி ராணுவம் வளைத்துவிட்டது. என் உடன் வந்தவர்கள் பதறிவிட்டார்கள். ஆனால் சுற்றி நின்ற ராணுவம் கட்டிப்பிடித்து அண்ணா ஒரு போட்டோ., அண்ணா ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா எனக் கேட்டார்கள். அனைத்து இடங்களிலும் நமக்கு ஆள் இருக்கிறது. பஞ்சாபில் எல்லாம் நிறைய சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். 70, 80 வயது ஆட்கள் எல்லாம் சீமான் அண்ணா என்பார்கள்” என்றார்.

ntk seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe