ADVERTISEMENT

'ஆள் மேல் ஆள் அனுப்புகிறார்கள்' - கடம்பூர் ராஜு பகீர்

10:52 AM Mar 01, 2024 | kalaimohan

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பிற்காக அனைத்து கட்சிகளும் காத்திருக்கும் சூழ்நிலையில் திமுக தொகுதிப் பங்கீட்டிற்கான இறுதி பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தற்போது வரை கூட்டணிக்கான கதவுகளை திறந்தே வைத்துள்ளது.

ADVERTISEMENT

சில மாதங்களுக்கு முன்னரே கூட்டணி பிளவு கண்டிருந்த அதிமுக, பாஜக கட்சிகள் ஒன்றை ஒன்று விமர்சிக்காமல் இருந்த நிலையில், தற்போது மாறி மாறி விமர்சனங்களை வைத்து வருகின்றன. இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.

ADVERTISEMENT

முன்னரே கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த எடப்பாடி பழனிசாமி, இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை. மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டாம் என கட் அன்ட் ரைட்டாக பேசியிருந்தார். எடப்பாடியின் இந்த பேச்சுக்கு பிறகு அரசியல் வட்டாரத்தில் அதிமுக, பாஜக வார்த்தை மோதல்கள் அதிகரித்தது. லேகியம் விற்பனை, வாய்க்கொழுப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் விமர்சனங்களை பாஜகவை நோக்கி வைத்தனர். ஆனால் மாற்றாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அதிமுகவின் தலைவர்களான ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரைப் புகழ்ந்து பேசியது மீண்டும் பாஜக, அதிமுக கூட்டணிக்கு அடித்தளமிடும் செயல் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த நிமிடம் வரை பாஜக எங்களுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கிறது. பாஜக வலுவாக இருந்தால் அதிமுகவிற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்திருப்பதாக வரும் கணிப்புகள் எதுவும் உண்மை இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை சேர்க்க பாஜகவினர் ஆள் மேல் ஆள் அனுப்புகிறார்கள். அதிமுக பலமாக இருப்பதால் பாஜக எங்களுக்காக காத்திருக்கிறது. இல்லையெனில் ஏன் காத்திருக்க வேண்டும்?' என்ற கேள்வியை வைத்துள்ளார் கடம்பூர் ராஜூ.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT