தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிமுக - பாஜக கூட்டணியில் தற்போது வரை தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.
அதிமுக - பாஜக இடையேநான்காம் கட்டதொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படாத நிலையில், பாஜகநிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகபாஜகதலைவர் எல்.முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டிரவி, தேர்தல் பொறுப்பாளர் வி.கே.சிங் ஆகியோர்சென்னைகமலாலயத்தில்அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபாஜகமேலிடப்பொறுப்பாளர் சி.டி.ரவி, ''சசிகலாவின் பலம் குறித்துமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும் தெரியும். சசிகலா, தினகரன் ஆகியஇரண்டு பேரையும் இணைப்பது குறித்து அதிமுகதலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதிமுகவுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நல்லமுறையில் சென்று வருகிறது'' என்றார்.