
குடிமைப்பணி தேர்வுக்குத்தயாராகும் மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று கலந்துரையாடினார். ஏற்கனவே திருக்குறள் மொழிபெயர்ப்பு, சனாதனம் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த கலந்துரையாடல் நிகழ்வில் அவர் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசியுள்ளதாவது, ''நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி உதவிகள் இருந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு 250 கோடி வரை வெளிநாட்டு நிதி நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதம் நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். கூடங்குளம் அணு உலை, விளிஞ்சம் துறைமுக திட்டங்களுக்கு எதிராக மக்களைத் தூண்ட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு நிதியை கட்டுப்படுத்த மத்திய அரசு எஃப்சிஐநிதியை முறைப்படுத்தி உள்ளது'' எனப் பேசியுள்ளார்.
Follow Us