கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என அரசுகளின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக போராடியவர் முகிலன்.

Advertisment

சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார் முகிலன். அவரை கண்டுபிடித்து தரக்கோரி ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிபிசிஐடி காவல்துறை பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வந்தனர். பல அரசியல் கட்சியினர் இவரை கண்டுபிடித்து தரக்கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

They have made me mentally ill - Mukhilan Interview

இவரை கொலை செய்து இருக்கலாம் என்றும்சந்தேகம் இருந்துவந்தது. இந்நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாமல் இருந்த முகிலனை திருப்பதி ரயில்வே போலீசார்மீட்டுவிசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

இவர் தமிழகத்தைச் சேர்ந்த முகிலன் என தெரியவந்தது திருப்பதியில் இருந்து ரயில் மூலம் காட்பாடி அழைத்துவந்தது காட்பாடி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். முகிலனை காட்பாடி காவல்துறையினர்மீட்டுசிபிசிஐடி போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.அதன்பின்சென்னைக்கு விசாரணைக்காகஅவர் கொண்டுசெல்லப்பட்டார்.

They have made me mentally ill - Mukhilan Interview

உடல் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிஅழைத்து செல்லப்பட்டஅவர் சுமார் இரண்டு மணி நேரம் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டார். பின்பு சிபிசிஐடி டி.எஸ்.பி வஜ்ரவேல் தலைமையில் போலிஸார், முகிலனை போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்னைக்கு அழைத்து சென்றனர்.

Advertisment

They have made me mentally ill - Mukhilan Interview

அவரிடம் நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளீர் என மருத்துவர்கள் கூறுகிறார்களாம்மே என நிருபர்கள் முகிலனிடம் கேள்வி கேட்டபோது, நான் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல, அவர்கள் என்னை மனநிலை பாதிக்கபட வைத்துவிட்டார்கள் என்று அழுகுரலோடு சொன்னார். அதற்கு மேல் பேசவிடாமல் காவல்துறை வாகனத்தில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட முகிலன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.