publive-image

Advertisment

இன்று அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப் படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலோசனை முடிந்து வெளியே வந்த பல்வேறு அதிமுக முக்கிய நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அதேபோல் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவருக்கு புதிதாக கார் வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழ் மகன் உசேன், ''அதிமுகவில் என்னுடைய உழைப்பிற்காக தமிழ்நாடு முழுவதும் கட்சி வளர்ப்பதற்காக எனக்கு இந்த காரை தலைமை கழகத்தினுடைய பொதுச்செயலாளர் தந்திருக்கிறார்' இந்த காரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கழகத்தை வளர்ப்பதற்கு நான் என்னை தயார்படுத்திக் கொள்கிறேன். இதுதான் காரணம்'' என்றார்.