Advertisment

வடக்கே உள்ளவர்களுக்கு அடிமை சேவகம் செய்து சுயநல ஆட்சி நடத்திவருகின்றனர்! போடியில் டிடிவி பேட்டி!!

ttv

Advertisment

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் மாநில அரசை கண்டித்து அமமுக சார்பாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வருகை தந்து தனது கட்சி தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள டிடிவி போடிக்கு வந்தார்.

அப்பொழுது அங்குள்ள உள்ள தனியார் விடுதியில் ஓய்வு எடுத்து வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது.... ஜெ இறந்த பின்பு இவர்களை முதலமைச்சர் ஆக்கியது யார். உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்துவிட்டு வடக்கே உள்ளவர்களுக்கு அடிமை சேவகம் செய்து மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்கள். சுயநல ஆட்சி செய்து வருகின்றனர். அம்மாவின் ஆன்மா 18 எம்எல்ஏ க்களை பழிவாங்கியதாக கூறுவது எல்லாம் பொய். யார் துரோகி என தேர்தல் முடிவில் தெரியவரும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்பது போல தற்போது அதர்ம அக்கிரமஆட்சி நடைபெறுகிறது.

விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். முதலமைச்சராக இருப்பதால் எதுவேண்டுமென்றாலும் கூறலாம் என்று பேட்டி கொடுத்து வருகிறார் முதல்வர். அவர் பேச்சை மக்கள் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். இது அமைதி புரட்சி, ஜனநாயக புரட்சியாக தேர்தல் நேரத்தில் வெளிப்படும் என்று கூறினார். பேட்டியின் போது தங்கதமிழ் செல்வனுடன் மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் உடன்இருந்தனர்.

ammk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe