/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a987_1.jpg)
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு தலை சிறந்த மாநிலமாக விளங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வரின்வெளிநாட்டு பயணத்தில் பெரிய முதலீடுகள் வரவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், 'தொழில் வளர்ச்சியில் புரிந்து வரும் சாதனைகளால் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்கிறது' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 2021 ஆம் ஆண்டுக்கு பின் 46 புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளன. 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு அதன் மூலம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 725 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தொழில்கள் வரவில்லையே என எதிர்க்கட்சியினர் பொறாமையால் புழங்குகின்றனர். பொறாமையில் புழுங்கும் எதிர்க்கட்சியினர் உண்மையை அறியாதவர்கள். மக்களிடம் தவறான தகவல்களை தந்து ஆட்சிக்கு எதிராக அவதூறான கருத்துக்களை விதைக்கும் முயல்கின்றனர். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்ததாக மத்திய அரசின் புள்ளியியல் திட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)