Advertisment

“இந்த எட்டு நபர்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்களாகக் கருதக்கூடாது”- வழக்கு தொடர்ந்த கோவையைச் சேர்ந்தவர்!

These eight persons should not be considered as members of the Opposition

திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் எட்டு பேரை எதிர்க்கட்சி உறுப்பினர்களாகக் கருதக் கூடாதென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள்திமுக கூட்டணியில் போட்டியிட்டது.இந்தக் கட்சி வேட்பாளர்களானசின்னப்பா, பூமிநாதன், சதன் திருமலை குமார், ராகுராமன், அப்துல் சமத், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

Advertisment

திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த எட்டு எம்.எல்.ஏ.க்களையும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருதக் கூடாது என உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 எம்.எல்.ஏ-க்களையும் எப்படி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருத முடியும் என்றும் இது ஜனநாயாகத்தை கேலி கூத்தாக்கும் செயல் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளைச் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது எனவும் இந்த எம்.எல்.ஏ.க்களை எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருதி, சட்டமன்றத்தில் தனி இருக்கை வழங்க கூடாது எனவும், சட்டமன்றத்தில் பேச தனியாக நேரம் ஒதுக்க கூடாது எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

case highcourt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe