Published on 11/02/2025 | Edited on 11/02/2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயானத்துக்கு பாதை இல்லாததால் வயலுக்குள் புகுந்து சடலத்தை உறவினர்கள் தூக்கிச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் வளர்புரம் கிராமத்தில் மூன்று சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்காக மூன்று பகுதிகளில் மயானங்கள் தனித்தனியாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் ஒரு மயானத்திற்கு மட்டும் சரியான பாதை இருக்கிறது. மற்ற இரண்டு மயானங்களுக்கு செல்ல சரியான பாதை இல்லை எனக் கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் பாதை அமைக்கப்படவில்லை.
இந்நிலையில் இறந்த மூதாட்டி ஒரு உடலை தூக்கிக்கொண்டு மயானத்திற்கு செல்ல வழி இல்லாமல் விளைநிலங்கள் வழியாக உடலை எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.