தமிழகத்தில் மேலும் 526 பேருக்குநேற்றுகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,535 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில்சென்னைகொண்டித்தோப்புபகுதியை சேர்ந்த 59 வயதான மாநகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவர் கரோனாபாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.அவர் இன்று காலை உயிரிழந்தார்.
சிகிச்சையில் இருந்த அந்த மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு நேற்று இரவு வரைஎந்தவிதமான அறிகுறியும் இல்லை என்றும், இன்று அதிகாலையில்மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி அவர் இறந்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதனால் தமிழகத்தின்துப்புரவு பணியாளர் ஒருவர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
தமிழகத்தில் கரோனாவால்பலியானோர் எண்ணிக்கை நேற்று 44 ஆக இருந்தது. இந்நிலையில்சென்னையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கரோனாஉயிரிழப்பு எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.