
சேலத்தில் கணவன் அடித்து சித்ரவதை செய்வதாக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், அப்பெண் கொடுத்த மரண வாக்குமூலமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த மனோன்மணி என்ற பெண்ணுக்கும், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த அரவிந்த் என்ற நபருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில் கணவன் தொடர்ந்து தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக மனோன்மணி அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மனோன்மணி வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நிலையில் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்குமுயன்றுள்ளார்.
உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், இறுதியில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் மனோன்மணி இறக்கும் தருவாயில் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளியான அந்த வீடியோ வாக்குமூலத்தில், ''என் ட்ரெஸ்ஸெல்லாம் கிழிச்சுட்டான். விடிய விடிய தூங்க விடுறதே இல்ல எப்போ பார்த்தாலும் ஃபியூச்சர் ஃபியூச்சர்னு சொல்லிகிட்டே இருப்பான். நிறையவாட்டி அடி வாங்கியிருக்கிறேன். அவங்க வீட்டுல ஒரு வித்தியாசமான ஊசி இருக்கு. அத எனக்கு தெரியாமல் எடுத்து எனக்கு குத்திட்டான். எனக்கு அது ஊசினு தெரியாது. அத எங்கிருந்து எடுத்தான்னு கூட எனக்கு தெரியாது. குத்தனவாட்டிதான் எனக்கு பிளட் வந்தது. அப்புறம் என்னை திட்டினான். அப்புறம்தான் எனக்கே தெரியும் அவன் ஊசி எடுத்து குத்துனது'' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)