Advertisment

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் பாஜக, விசிக இடையே தகராறு

There is a problem between BJP and Vishika over paying respect to Ambedkar statue

சட்டமேதை அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள்கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டையில் ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை மற்றும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு இன்று காலை பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பேரணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தனர். ஆனால், அவர்கள் வருவதை அறிந்து விசிகவினர் ஒன்று திரண்டு பாஜகவினர் மாலை அணிவிக்கக் கூடாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் தங்களை மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதிக்க வேண்டுமென பாஜகவினர் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisment

ambedkar Thanjavur vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe