Advertisment

பிரச்சாரத்திற்கு வரும் உதயநிதியை கைது செய்யத் திட்டமா? டி.ஐ.ஜி தலைமையில் போலீஸார் குவிப்பு!

Is there a plan to Udayanidhi who is coming for the campaign ?; Police mobilized under the leadership of DIG!

உதயநிதி ஸ்டாலின் திருக்குவளை வருகையால் டி.ஐ.ஜி தலைமையில் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர். மேடையில் ஏரி பிரச்சாரம் செய்தால், கைது செய்வோம் எனக் காவல்துறையினர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

Advertisment

தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரப் பயணத்தைதுவங்குவதற்காக, இன்று மாலை 3 மணிக்கு, திருவாரூர் வந்தடைந்தார். அங்கு சன்னதி தெருவில் இருக்கும் கலைஞரின் சகோதரி வீட்டில், மதிய உணவை முடித்துக்கொண்டு, கலைஞரின் தாயார் சமாதியிருக்கும் காட்டூருக்குச் சென்று வணங்கினார். அப்போதே காவல்துறையினர் ஐந்து கார்களுக்கு மேல் சென்றால் கைது செய்வோம் எனக் கூறியிருந்தனர்.

Advertisment

thirukuvalai

இந்த நிலையில், நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கலைஞர் வீட்டின் முன்பு மேடை அமைக்கப்பட்டு பிரமாண்டப் படுத்தியுள்ளனர். அதோடு தொண்டர்களும் குவிந்திருந்தனர். அவரது குலதெய்வக் கோயிலில் முதல் மரியாதைக்காகவும் குருக்கல்கள் காத்திருந்தனர். இந்தச் சூழலில் தஞ்சை சரக டி.ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா தலைமையில், 10 டி.எஸ்.பி, 14 ஆய்வாளர்கள் என 500 -க்கும் மேற்பட்ட போலீசார் கலைஞர் வீட்டிற்குச் செல்லும் வழியில் குவிந்துள்ளனர்.உதயநிதி வாகனத்துடன் 3 வாகனங்கள் செல்ல மட்டுமே காவல்துறை அனுமதித்துள்ளனர். மீறிச் சென்றால் கைது செய்வோம் என மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.

police election campaign udhayanidhistalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe