Advertisment

''எங்க மாவட்டத்துக்காரன் ஒருத்தன் இருக்கான்...''-முன்னாள் அமைச்சரை வெளுத்து வாங்கிய பொன்முடி!

DMK

Advertisment

சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக நிகழ்ச்சியில் பேசியிருந்த பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் திமுக முப்பெரும் விழாவில் பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னாள் அதிமுக அமைச்சரை வெளுத்து வாங்கினார்.

பொன்முடி பேசியதாவது, ''அதிமுக என்ற கட்சி இருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்களுக்குள்ளேயே ஆயிரம் பேர் அடித்துக் கொள்கிறார்கள். அவர்களில் ஒருத்தன் இருக்கிறான், எங்க மாவட்டத்துக்காரன். அவன் பேரு சி.வி.சண்முகம். ஒரு வக்கீல், அவன் நேற்று பேசி இருக்கான். இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறது. அவன் சொல்கிறான் ஸ்டாலின் என்னுடைய இதைக் கூட புடுங்க முடியாது என்று பேசுகிறான். அவன் எல்லாம் ஒரு லா மினிஸ்டராக இருந்தவன், சட்ட மந்திரியாக இருந்தவன். இப்பொழுது ராஜ்யசபா பார்லிமென்ட் உறுப்பினராக போய் இருக்கிறான். இவனை எல்லாம் மக்கள் மன்னித்து விடுவார்களா? தயவுசெய்து நினைத்துப் பாருங்கள்.

இதையெல்லாம் நினைத்து பார்த்துதான் நாம் நடந்து கொள்ள வேண்டும். அவனுக்கெல்லாம் வெறி பிடித்துப் போய்விட்டது. இனிமேல் அவனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல எங்குமே அவன் கட்சியே கிடையாது. அவன் கட்சியேஒழிஞ்சு போயிருச்சு. பிஜேபிகாரனுக்கு அடுத்தபடியா இவன் வருவான் போல இருக்கு. நான் அவன் இவன் என்று கூட பேசியதில்லை மரியாதையாக தான் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் நேற்று அந்த ஆள் பேசிய பேச்சை கேட்ட பொழுது நமக்கே வேகம் வருகிற அளவுக்கு பேசுகிறான் என்று சொன்னால் தமிழ்நாட்டு மக்களே எண்ணிப் பாருங்கள். தமிழகத்தை பொறுத்தவரை ஸ்டாலின் தான் திராவிடம் மாடல் ஆட்சி நடத்தக்கூடிய ஒரே தலைவர். அவரை போல் எவனாலும் முடியாது.

Advertisment

அது சில முண்டங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். வரலாறு தெரியாத நாய்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நானே இவ்வளவு வேகமாக பேச மாட்டேன். ஆனால் இப்படி பேச வைக்கிறார்கள் அவர்கள். அந்த அளவிற்கு அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். யார் யாரோ புதிது புதிதாக வந்து மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டிவிட்டு எப்படியாவது இந்த ஆட்சியை கலைத்து விட முடியுமா? இந்த ஆட்சியை எப்படியாவது வரவிட முடியாமல் செய்துவிட முடியுமா என்று நினைக்கிறார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் மு.க.ஸ்டாலின் தான் தமிழகத்தில் நிரந்தர முதல்வர், இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது'' என்றார் ஆவேசமாக.

admk Ponmudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe