Advertisment

“ஜெயலலிதா சொத்துக்கள் அவரது அண்ணன் குழந்தைகளுக்கு சேர்வதில் தவறில்லை..” - திருநாவுக்கரசர் எம்.பி.

publive-image

Advertisment

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகரைச் சேர்ந்த பூமிநாதன் என்பவர் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்துவந்தார். இவர், கடந்த 21ஆம் தேதி ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்டார்.இந்நிலையில், இன்று (25.11.2021) அவரது குடும்பத்தினரை திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இச்சம்பவம் ஒரு துரதிருஷ்டவசமானது. இதுபோல் சம்பவம் நடந்திருக்கவும் கூடாது. இனிவரும் காலங்களில் காவலர்கள் ரோந்து பணிக்குச் செல்லும்போது அவர்களுக்குப் பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்கப்படும் என்று கூறியுள்ளதுபோல் வழங்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவர் நடிகையாக இருந்தபோது சம்பாதித்தது மற்றும் அவரது தாய் சம்பாதித்த சொத்துக்கள் அவரது அண்ணன் குழந்தைகளுக்குப் போய்ச் சேர்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அவர் முதல்வரான பிறகு பொதுமக்கள் பணத்தில் சம்பாதித்துக் கட்டிய வீடுகள், வாங்கிய சொத்துக்களை நினைவகமாக ஆக்கலாம். முடிந்தால் அரசுடைமையாக்கவும் செய்யலாம்” என்று கூறினார்.

admk jayalalitha thirunavukkarasar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe