Advertisment

டி.ஐ.ஜி வீட்டில் எதுவும் இல்லை – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

There is nothing in the DIG's house - Corruption Eradication Information

Advertisment

சென்னை மாவட்ட டாஸ்மாக் மேலாளராக முருகன் உள்ளார். இவரது அலுவலகத்தில் டிசம்பர் 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் சில லட்ச ரூபாய் சிக்கியுள்ளது. அதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்ய அறிக்கை அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து முருகன் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

முருகனின் மனைவி ஜெயபாரதி, வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக உள்ளார். ஜெயபாரதி, முருகன் இல்லமாக வேலூரில் சிறைத்துறை சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள அரசு இல்லத்தில் தங்கியுள்ளார். அதனால் டி.ஐ.ஜி. வீட்டில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ஹேமசித்ரா தலைமையிலான போலீஸார் டிசம்பர் 16ஆம் தேதி ரெய்டு செய்தனர்.

அந்த ரெய்டு நீண்ட நேரமாக நடந்துள்ளது. இதுப்பற்றி இன்று தகவல் கூறிய லஞ்ச ஒழிப்புத்துறை, வீட்டில் உள்ள நகை உள்ளிட்ட சொத்துக்களை கணக்கிட்டோம். வீட்டில் பணம் எதுவும் கைப்பற்றவில்லை எனத் தகவல் கூறியுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vellore vigilance officers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe