Advertisment

"ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது"- நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்!

publive-image

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். பாரம்பரிய வேஷ்டி, சேலை அணிந்து வீடுகளுக்கு வெளியே சூரியனுக்கு பொங்கலிட்டு, மகிழ்ச்சிப் பொங்க பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Advertisment

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் வணக்கம், ஒரு கஷ்டமான, ஆபத்தான சூழ்நிலையில வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பாகக் கடைபிடிங்க, ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் வெளியே திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டார்.

pongal Tweets
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe