Advertisment

''கொடி விற்பனைக்கு வரி இல்லை... இதை திருவிழா போல கொண்டாட வேண்டும்''- பாஜக வானதி சீனிவாசன்!

publive-image

பிரதமர் மோடி, சில தினங்களுக்கு முன்பு 'மன்கிபாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அந்த நிகழ்ச்சியில் "கரோனாவுக்குஎதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் அற்புதமான, வரலாற்றுத் தருணத்தைக் காணப்போகிறோம். வரும் ஆகஸ்ட் 13- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்"எனக்கோரிக்கை வைத்திருந்தார்.

Advertisment

பிரதமரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தமிழகத்தில் பாஜக சார்பில் இதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகஎம்.எல்.ஏவானதி சீனிவாசன், ''வரும் 13 ஆம் தேதி கலையிலிருந்து 15 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் ஒவ்வொரு வீடுகளிலும் நமது தேசிய கோடியை ஏற்ற வேண்டும்.அதனைத்தகுந்த மரியாதையுடன் போற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. கொடியை ஏற்றிவிட்டு அதனைகலாச்சாரத்துறைசார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு இணையதளத்தில் பதிவிட வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை பாஜக செய்து வருகிறது. சுமார் 50 லட்சம் வீடுகளில் கொடி ஏற்ற ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. கொடியேற்ற சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. கதர் துணியில் மட்டுமே தேசியக்கொடியைத்தயாரிக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி எம்மாதிரியான துணியிலும்பாலிஸ்டர், பட்டுஆகியவற்றிலும்கொடியைத்தயாரிக்கலாம்.தேசியக்கொடி விற்பனைக்கு வரிவிதிப்பு இல்லை. மாலை 6மணிக்குத்தேசியக்கொடியை இறக்கிவிட வேண்டும்என்பதற்குப்பதிலாகத்தகுந்த மரியாதையுடன் எல்லா இடத்திலும் இரவும்கொடியைப்பறக்க விடலாம் ஆனால் கொடியை அவமானப்படுத்தக்கூடாது. எனவே இதனை ஒரு திருவிழாபோலக்கொண்டாட வேண்டும்'' என்றார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe