Skip to main content

''கொடி விற்பனைக்கு வரி இல்லை... இதை திருவிழா போல கொண்டாட வேண்டும்''- பாஜக வானதி சீனிவாசன்!

Published on 05/08/2022 | Edited on 05/08/2022

 

"There is no tax on the sale of the flag... this should be celebrated like a festival"- BJP's Vanathi Srinivasan!

 

பிரதமர் மோடி, சில தினங்களுக்கு முன்பு 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அந்த நிகழ்ச்சியில் "கரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் அற்புதமான, வரலாற்றுத் தருணத்தைக் காணப்போகிறோம். வரும் ஆகஸ்ட் 13- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

 

பிரதமரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தமிழகத்தில் பாஜக சார்பில் இதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ''வரும் 13 ஆம் தேதி கலையிலிருந்து 15 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் ஒவ்வொரு வீடுகளிலும் நமது தேசிய கோடியை ஏற்ற வேண்டும். அதனைத் தகுந்த மரியாதையுடன் போற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. கொடியை ஏற்றிவிட்டு அதனை கலாச்சாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு இணையதளத்தில் பதிவிட வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை பாஜக செய்து வருகிறது. சுமார் 50 லட்சம் வீடுகளில் கொடி ஏற்ற ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. கொடியேற்ற சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. கதர் துணியில் மட்டுமே தேசியக் கொடியைத் தயாரிக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி எம்மாதிரியான துணியிலும் பாலிஸ்டர், பட்டு ஆகியவற்றிலும் கொடியைத் தயாரிக்கலாம். தேசியக் கொடி விற்பனைக்கு வரிவிதிப்பு இல்லை. மாலை 6 மணிக்குத் தேசியக் கொடியை இறக்கிவிட வேண்டும் என்பதற்குப் பதிலாகத் தகுந்த மரியாதையுடன் எல்லா இடத்திலும் இரவும் கொடியைப் பறக்க விடலாம் ஆனால் கொடியை அவமானப்படுத்தக்கூடாது. எனவே இதனை ஒரு திருவிழா போலக் கொண்டாட வேண்டும்'' என்றார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.