Advertisment

“கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்குப் பட்டா வழங்குவதற்கான பேச்சுக்கே இடமில்லை”- சேகர் பாபு பேட்டி!

publive-image

Advertisment

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று திருச்சியில் உள்ள மிக முக்கிய ஸ்தலமான திருச்சி ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்காவல் உள்ளிட்ட கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார். யானை (அகிலா) குளிப்பதற்குப் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குளியல் தொட்டியையும், கோவில் உட்பிரகாரங்களையும் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “தமிழகம் முழுவதும் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.

கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இறைவன் சொத்தை இறைவனுக்கே என்கிற அடிப்படையில் இதுவரை 180 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. திருக்கோவில்களில் அறங்காவலர் குழுவிற்கான சட்டதிட்ட விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கோயில் இடங்களில் காலம் காலமாகக் குடியிருப்பவர்களுக்குப் பட்டா வழங்குவதற்கான பேச்சுக்கே இடமில்லை. இது குறித்து ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் உள்ளிட்ட ஆலயங்களில் 16ஆம் தேதி முதல் அனுதினமும் 5000ம் பேருக்கு அன்னதான திட்டம் முதல்வரால் துவங்கி வைக்கப்பட உள்ளது. திருக்கோவில்களில் பணியாற்றும் பணியாளர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு நிரந்தர பணிகள் வழங்க வேண்டும் என்று முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்தார்” எனக் கூறினார்.

trichy minister sekar babu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe