Advertisment

சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை - கே.பி முனுசாமி உறுதி!

Advertisment

ds

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள சசிகலா கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தீவிர அரசியலில் ஈடுபட பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறார். தன்னை அதிமுக பொதுச்செயலாளராக தொடர்ந்து அவர் அடையாளப்படுத்தி வந்தாலும், அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மறுப்பு தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி சசிகலாவை கடுமையாக தாக்கிப் பேசினார்.

Advertisment

இந்த நிலையில், மதுரையில் இன்று மதியம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திடம் சசிகலா மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், " சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, " சசிகலாவை அதிமுகவில் சேர்க்க கூடாது என்று ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக எந்த கேள்வியும் தற்போது வரை எழவில்லை.சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய நிர்வாகிகளை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் சேர்ந்தே நீக்கியிருக்கிறார்கள். எனவே முடிந்த ஒரு விஷயத்திற்கு கமா போட்டு மீண்டும் தொடர்வது தேவையில்லாத ஒன்று, சசிகலாவை சேர்க்கும் பேச்சை தேவையில்லாதது, அதற்கான வாய்ப்பில்லை" என்றார்.

ops eps
இதையும் படியுங்கள்
Subscribe