mmmm

Advertisment

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி 9 மதகுகள் உடைந்து விழுந்தன. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தற்காலிக சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கின. இதற்காக ஆற்றுக்குள் முதல் கட்டமாக மணல் மூட்டைகள் அடுக்கும் பணியும், அடுத்து உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து கொட்டும் பணியும் நடந்தது. இருப்பினும் தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை. பாறாங்கற்களின் இடைவெளி வழியாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

இதனை தடுத்து நிறுத்துவதற்காக உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று மதியம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தொழிலாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்த போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிந்து விழுந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மணல் மூட்டைகள் சரிந்து விழுந்ததை கண்டு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.

mukkombu 2

Advertisment

இது சம்மந்தமாக வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தண்ணீர் அதிகமாக வந்ததால் குறிப்பிட்ட இடத்தில் தண்ணீர் வேகமாக வெளியேறியது. மணல் மூட்டைகள் சரிந்து விழுந்த இடம் சுமார் 35 அடிக்கும்மேல் ஆழமான பகுதியாகும். அந்த இடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டியுள்ளது. காவிரியில் நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்த தண்ணீரை புள்ளம்பாடி, அய்யன், பெருவளை வாய்க்கால்களில் திறந்து விடுவதற்காக தேக்கியதால் தான் கொள்ளிடத்தில் தண்ணீர் அதிகரித்தது. இதனால் தான் அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிந்து விழுந்தன’ என்றார்.

இதற்கு இடையில் திருச்சியில் உள்ள சமூக ஆர்வலர்கள் இந்த தற்காலிக அணை அடைப்பு விசயத்திலே ஏகப்பட்ட ஊழல் குற்றசாட்டுகள் வருகின்றன. சாக்கு வாங்கியதில், ஊழல், மணல் அடுக்கியதில் ஊழல், வேலை செய்யும் ஆட்களுக்கு கூலி கொடுப்பதில் ஊழல் என்று ஏகப்பட்ட குற்றசாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்காலிக அடைப்பு பணிக்கு 90 இலட்சம் பத்தவில்லை இன்னும் 4.5 கோடி பணம் வேண்டும் என்று அதிகாரிகள் திட்டம் போட்டு அனுப்பியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் புதிய அணைக்கு வேறு 325 கோடியில் கட்டப்படும் என்று சொல்லியி ருக்கிறார்கள். இதற்கு உள்ளுர் டெண்டர் கொடுக்க முயற்சி நடக்கிறது. 90 இலட்சம் பணத்தை செலவு செய்வதிலே இவ்வளவு ஊழல்கள் இருக்கும் போது.. 325 கோடிக்கு இன்னும் பெரிய அளவில் ஊழல்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்த புதிய அணைக்கு சர்வதேச டெண்டர் விட வேண்டும் என்கிற கோரிக்கை வலுக்கிறது.