(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்குஇரண்டாயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் தொடுத்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2000 ரூபாய் வழங்குவதற்கான அரசாணையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை குடும்பங்களை கண்டறியும் முறை தவறாக இருக்கிறது மேலும் முன்னுக்குப்பின் முரணாக இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுஎனவே இந்த திட்டத்தை பற்றி விசாரிக்க வேண்டும் எனஅந்த முனுவில் கூறப்பட்ட நிலையில், நேற்று நடந்த விசாரணையை அடுத்துஇன்று அந்த வழக்கில்இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
அரசு வகுத்துள்ள நெறிமுறைகள் சரியானதாக இருக்கிறது. எனவே அந்த அரசாணைகள் செல்லும் என கூறிய நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.