Advertisment

'இதில் தலையிட எவ்வித காரணமும் இல்லை' - வேலுமணிக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்

'There is no reason to interfere in this'- the court gave Velumani Shock

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

Advertisment

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஏற்கனவே டெண்டர் முறைகேடு வழக்கில் முகாந்திரம் இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றத்தில் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்தநீதிபதிகள் பிரகாஷ் மற்றும் ராமன் அமர்வு, மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எஸ்.பி.வேலுமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது.

Advertisment

அதேநேரம் தன் மீதான சொத்துகுவிப்புவழக்கினைரத்து செய்ய வேண்டும் என்றவேலுமணியின் மனுவை விசாரித்த நீதிபதிகள், வேலுமணிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது. தேர்தல்களின் போது வேலுமணி கொடுத்த சொத்து கணக்குகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களுக்கு அவரிடம் விளக்கம் கேட்ட பிறகு வழக்குப்பதிவு செய்ய முடியும் என்கின்ற வாதத்தை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.இதனால் இந்த வழக்கில் தலையிட எவ்வித காரணமும் இல்லை என வேலுமணியின் மீதானசொத்துகுவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யநீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

admk highcourt velumani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe