Advertisment

அரசியலில் பின்னடைவு கிடையாது....அனுபவம்தான்- டிடிவி.தினகரன்

ttv

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் எனநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த அதிரடி தீர்ப்புகுறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

Advertisment

அரசியலில் பின்னடைவு என்று எதுவும் கிடையாது. இது ஒரு அனுபவம்தான். இதற்கு முன் இரட்டை இலை சின்னம் இல்லாமல் போனது குறித்த கேள்விக்கு கூட இது ஒரு அனுபவம்தான் எதையும் நாங்கள்எதிர்கொள்வோம்எனக்கூறி இருந்தேன் அதுபோல் இதுவும் ஒரு அனுபவம்தான் இதையும் எதிர்கொள்வோம்.

Advertisment

இதற்கு அடுத்தகட்டமாக சம்பந்தப்பட்ட 18 எம்.எல்.ஏக்களுடனும் கலந்து ஆலோசித்து அந்த முடிவின்படி நாங்கள் செயல்படுவோம். 18 எம்.எல்.ஏக்கள் மொத்தமாக சேர்ந்து மேல்முறையீடு செய்யலாம் என்றால் மேல்முறையீடு செய்யத்தயார்.

அநேகமாக இன்று மாலை குற்றலாம் செல்வேன். தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் 18 தொகுதிகளின்இடைத்தேர்தல் மற்ற இரண்டு தொகுதி இடைத்தேர்தலுடன் நடந்தால் மொத்தம் 20 தொகுதிகளிலும் நாங்கள்தான்வெற்றிபெறுவோம் எனவே இதில்எங்களுக்கு சாதகம் அதிகம் என கூறினார்.

verdict 18 MLA's case
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe