Advertisment

''பிரியாணியில் பீஸ் இல்லை...'' -கடை ஊழியரைத் தாக்கிய போதை கும்பல்!

 '' There is no Piece in the biryani ... '' -Drug gang that attacked the shop employee!

சென்னையில் பிரியாணி கடை ஒன்றில், வரிசையில் நின்று பிரியாணி வாங்க முடியாது. பிரியாணியில் பீஸ் இல்லை என வாக்குவாதம்செய்த போதை கும்பல் ஒன்று கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை பெரியமேட்டில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் அனைவரும் வரிசையில் நின்று பிரியாணி வாங்கிக்கொண்டிருந்தனர். அப்பொழுது வந்த கும்பல் ஒன்று வரிசையில் நின்றெல்லாம்பிரியாணி வாங்க முடியாது என ரகளை செய்தனர். வந்தவர்கள் மது அருந்தி இருந்ததை தெரிந்துகொண்ட கடை ஊழியர் பிரச்சனை செய்வார்கள் எனக்கருதி பிரியாணியைகொடுத்தார். இருந்த போதிலும் கொடுக்கப்பட்ட பிரியாணியில் பீஸ் இல்லை என அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் மிரட்ட, இருவருக்கும் வாக்குவாதமானது. வாக்குவாதம்முற்றி கைகலப்பில் முடிந்தது. உடனடியாக அந்த போதை ஆசாமிமேலும் சில ஆட்களை வரவைத்துகடை ஊழியரை சரமாரியாக தாக்கினர். இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்பொழுது அந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

briyani incident
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe