
தமிழகத்தில் கரோனாபரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தமிழகப்பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை டி.எம்.சி. வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், ''தமிழகத்தில் தடையின்றி மக்களுக்கு கரோனாதடுப்பூசி போடப்படுகிறது. கரோனாதடுப்பூசி குறித்து அதிக வந்ததிகள் பரவுவதுவாடிக்கையாக உள்ளது. தடுப்பூசி மருந்துகள் வீணாகாமல் தடுப்பதற்குத் தேவையான அறிவுரைகளை தொடர்ந்து வழங்கிவருகிறோம். கூடுதலாக 5 லட்சம் கோவாக்சின் டோஸ் வரும் என எதிர்நோக்கியுள்ளோம். தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதேஇல்லை.இனியும்இருக்காது. தமிழகத்தில் மட்டும் ஆக்சிஜன் வசதியுடன் 32,405 படுக்கைகள் உள்ளது. எல்லோரும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்வதால் படுக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அனைவரும் மாஸ்க் அணிவது அவசியம்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)