கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி மீதான வழக்கை பெண் அதிகாரியின் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணையில் நிர்மலாதேவி விவகாரத்தை சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும்கருப்புசாமி ஆகியோருக்காக மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தமுயன்றதாகவும், நிர்மலாதேவி இதற்காகமாணவிகளிடம் பேசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பாலியல் தொல்லை தடைச்சட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமல்படுத்தியதா என ஆராய வேண்டியுள்ளது என தெரிவித்தநீதிபதிகள்அதேபோல் காமராஜர் பல்கலைக்கழகம் இதற்கு பதிலளிக்க வேண்டும் எனஉத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
Follow Us