Advertisment

'இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை' - புது யோசனை சொன்ன விஜய்

 'There is no need for NEET in the whole country anymore' - Vijay said

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்து வருகிறார். கடந்த வாரம் 28 ஆம் தேதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்ற இந்த நிலையில், இன்று புதுச்சேரி காரைக்கால் உட்பட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்தநிலையில் 'ஆளப்போறான் தமிழன்' என்ற பாடல் பின்னணியில் ஒலித்தபடி மேடை ஏறிய நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற தொடங்கினார். அவர் உரையில், ''நான் இன்று எதுவும் பேச வேண்டாம் என்று தான் நினைச்சேன்.ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி நான் பேசவில்லை என்றால் அது அவ்வளவு கரெக்டாக இருக்காது என தோணுச்சு. நீங்களே கெஸ் பண்ணி இருப்பிங்க எதைப்பற்றி பேசப்போகிறேன் என்று, எஸ்... நீட், நீட் தேர்வு பற்றி தான். இந்த நீட் என்பது நம் தமிழ்நாட்டில் இருக்கின்ற மாணவ மாணவிகள் குறிப்பாக கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவர்கள் ரொம்பவும் பாதிக்கப்படுகிறார்கள். இது சத்தியமான உண்மை.

Advertisment

இந்த நீட்டைப் பற்றி ஒரு மூன்று பிரச்சனைகளாக நான் பார்ப்பது ஒன்று; நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது. 1975 க்கு முன்னாடி பார்த்தால் கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது. அதன் பிறகு தான் அதனை ஒன்றிய அரசு பொதுப்பட்டியலில் சேர்த்தார்கள். அதுதான் முதல் பிரச்சினையாக ஸ்டார்ட் ஆச்சு. ஒரே நாடு, ஒரே பாடத்திட்டங்கள், ஒரே தேர்வு இது பேசிக்காவே கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரான விஷயமாக பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ற மாதிரி பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். இதை நான் மாநில உரிமைகளுக்காக மட்டுமே கேட்கவில்லை. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள் பார்வைகள் இருக்கிறது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய பார்வை. பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் என்று சொல்ல முடியாது.

மாநில மொழியில் படித்துவிட்டு என்.சி.இ.ஆர்.டி சிலபஸில் தேர்வு வைத்தால்எப்படி அதுவும் கிராமபுரத்தில் இருக்கும் மாணவ மாணவிகள் மருத்துவப் படிப்புக்கு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இது எவ்வளவு கடினமான விஷயம். போன மே மாதம் ஐந்தாம் தேதி நீட் எக்ஸாம் நடந்தது. அதில் சில குளறுபடிகள் எல்லாம் நடந்ததா செய்திகள் எல்லாம் பார்த்தோம், படித்தோம். அதன் பிறகு என்ன ஆகிவிட்டது என்று பார்த்தால் நீட் தேர்வுக்கு மேலே இருக்கின்ற நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய்விட்டது. இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை என்பதை நாம் செய்திகள் மூலம் தெரிந்து கொண்ட விஷயம். சரி இதற்கு என்னதான் தீர்வு, நீட் விலக்குதான் தீர்வு. தமிழக அரசு சட்டமன்றம் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இதைச் சீக்கிரமாக சால்வ் பண்ண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன என்று கேட்டால் கல்வி வந்து பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது சிக்கல் இருக்கு என்றால் ஒரு இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு பொதுப்பட்டியல் என்று உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தைச் சேர்க்க வேண்டும். இப்பொழுது இருக்கிற பொதுப்பட்டியலில் என்ன பிரச்சனை என்றால் அதில் உள்ள துறைகள் எல்லாம் பார்த்தால் மாநில அரசுகளுக்கு என்னதான் அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கு. மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். ஒன்றிய அரசு அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு சில மெடிக்கல் காலேஜ் எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ ஆகிய நிறுவனங்களில் வேண்டுமானால் நீட் எக்ஸாம் நடத்த வேண்டும் என்றால் நடத்திக் கொள்ளலாம். இது என்னுடைய சஜ்ஜஷன்தான் இது நடக்குமா? உடனே நடக்காது எனவும் தெரியும் அப்படியே நடந்தாலும் நடக்க விட மாட்டார்கள் என்றும் எனக்குத்தெரியும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில்என்னுடைய பரிந்துரையைச் சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன். இதுதான் என்னுடைய தனிப்பட்ட ஒரு கருத்து நீட்டைப் பற்றி'' என்றார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe