'There is no need for Kamal to come to the alliance' - Vaiko interview

Advertisment

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம்,கூட்டணி பேச்சுவார்த்தை ஆகிய பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன. அதிமுகசார்பிலும்,திமுகசார்பிலும் பிரச்சாரக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 'கடந்த10 ஆண்டுகளில் நாடு நாசமாக்கப்பட்டதைச் சொல்லி மக்களிடம்வாக்கு கேட்போம்' என மதிமுகபொதுச்செயலாளர் வைகோதெரிவித்துள்ளார்.

மதுரையில்செய்தியாளர்களைச் சந்தித்தஅவர், ''திமுக கூட்டணிக்குக் கமல்ஹாசன் வரவேண்டிய அவசியம் இப்போதுஇல்லை.வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவதுஉறுதி. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிமகத்தான வெற்றி பெறும்.கடந்த10 ஆண்டுகளில் நாடு நாசமாக்கப்பட்டதைச் சொல்லி மக்களிடம்வாக்கு கேட்போம். மத்திய அரசு கார்ப்பரேட் அரசாகவும், மாநில அரசு மத்திய அரசின்கொத்தடிமையாகவும் உள்ளது,''என்றார்.