Skip to main content

தற்போது ஸ்டெர்லைட்டை மூடத் தேவையில்லை - அமைச்சர் மா. சுப்ரமணியன்

Published on 08/07/2021 | Edited on 08/07/2021
 There is no need to close Sterlite - Minister Ma Subramaniam

 

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் தேவைக்கேற்ப ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பின்னர் தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டுவருகிறது. முதல் அலையில் இல்லாத வகையில் கரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது.

 

இதன் காரணமாக ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. அதன்படி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையும் ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்டது. இந்நிலையில், தமிழநாட்டிற்கு ஆக்சிஜன் தேவை  இருப்பதால் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை என தமிழ்நாடு மருத்துவதுறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ''தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியம் இல்லை. முழுமையாக கரோனா குறைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை குறித்து முடிவெடுக்கப்படும். நேரம் வந்ததும் புதிய சுகாதாரத்துறை அமைச்சரை டெல்லியில் சந்திப்போம்'' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

'இதையெல்லாம் வைத்து பணம் சம்பாரிக்கணுமா?' - மறுத்த அமைச்சர் மா.சு  

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேரளா அரசு சடலங்களை விற்று வருவாய் ஈட்டியது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், 'அடையாளம் தெரியாத சடலங்கள் குறிப்பிட்ட காலம் வரை மருத்துவக் கல்லூரி உடற்கூறு ஆய்வுக்கு பயன்படுத்துவது என்பது எல்லா இடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒன்று. அதிலும் கூட பணம் செய்ய வேண்டும் என்பதுதான் ஒரு கேள்விக்குறி. தமிழ்நாடு அரசு கொஞ்சம் யோசித்து தான் முடிவு எடுக்கும். அது தேவையா என்பது தான். அது நல்லது என்று சொல்ல முடியாது. அதை போய் உடற்கூறாய்வுக்கு விற்பது என்பதை ஏற்கவில்லை. இலவசமாக தரலாம் ஆனால் அதை பணமாக்க வேண்டும் என்பது நல்ல கருத்தாக தெரியவில்லை'' என்றார்.