publive-image

கோவையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசைசௌந்தரராஜன் இது குறித்து விளக்கம் அளித்து பேசுகையில், ''தமிழ்த்தாய் வாழ்த்து எல்லா இடத்திலும் பாடப்பட வேண்டும். கண்டிப்பாக பாடி இருக்கணும். இது கருத்தரங்கம் என்பதால் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் இது உள்நோக்கத்தோடு நிகழ்ந்தது அல்ல'' என்றார்.

Advertisment