Advertisment

கால்நடை மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; பாமக புகார்

There is no doctor in the veterinary hospital in Trichy Palakarai

திருச்சி பால்க்கரையில் செயல்பட்டுவரும் கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் வராததாக் மக்கள் அவதியுறுவதாக பாமகவினர் புகார் அளித்துள்ளனர். திருச்சி பாட்டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் பி.கே.திலீப்குமார் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து மனு கொடுத்தனர்.

Advertisment

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள பன்முக கால்நடை மருத்துவமனை இருந்து வருகிறது. ஆனால் பன்முகம் என்றால் 24 மணி நேரமும் 8 மணி நேரத்திற்கு ஒருவர் என்ற வீதம் 3மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் மருத்துவர்கள் இருந்தும் இதுவரை ஒரு மருத்துவர் கூட கால்நடை மருத்துவமனைக்கு பணிக்கு வருவதில்லை. அதுமட்டுமல்லாமல் திருச்சி மாநகரில் உள்ள ஆடு, மாடு, கோழி மற்றும் நாய் செல்ல பிராணிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள் மருத்துவர்கள் வருவார் என்று சொல்லி கொண்டே கால்நடைகளை எதிரே உள்ள தனியார் மருந்து கடைகளில் மருந்து வாங்கி வாருங்கள் என்று சொல்லுகிறார்.

Advertisment

அதையும் மீறி மருத்துவர்கள் இல்லையா? என்று பொதுமக்கள் கேட்டால் சரிவர பதில் எதுவும் சொல்வதில்லை. எனவே சம்மந்தப்பட்ட அரசு ஊதியம் பெறும் மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாகவும்,திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட பாமக சிறுபான்மை பிரிவு தலைவர் அரிஹரன், பாலக்கரை பகுதி செயலாளர் மரக்கடை கண்ணன், மலைக்கோட்டை பகுதி முருகானந்தம், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன், மற்றும் பா.ம.க.உறுப்பினர்கள் விஜி. நிர்மல், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

hospital trichy pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe