Skip to main content

ஜனரல் டயருக்கும் மோடிக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை;திருவாரூர் ஆர்பாட்டத்தில் பழனிமாணிக்கம் தாக்கு!

Published on 04/10/2018 | Edited on 04/10/2018

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் மீண்டும் உயிர்பெற்று இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த திட்டம் தற்போது வேறு மூன்று இடங்களுக்கு மாற்றி கையொப்பமாகியிருக்கிறது.

 

இந்தியா முழுவதும் மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிடப்பட்டு அதில் 41 இடங்களை வேதாந்தா எனும் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிவழங்கியுள்ளது மத்திய  மோடிஅரசு. மீதமுள்ள  14 இடங்களில் வேறு 4 நிறுவனங்களுக்கு அனுமதி வாழங்கியுள்ளது. இதில் தமிழகத்தில்  மூன்று இடங்களை குறிவைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது.

 

dmk

 

தமிழகத்தில் அனுமதித்துள்ள மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் வேதாந்த நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்க இருக்கிறது. இதற்கான ஆய்வு பணிகள் விரைவில் தொடங்க இருக்கின்றன.

 

நாகை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் எடுக்க உள்ளது வேதாந்தா நிறுவனம். அதற்காக மத்திய அரசிடம் 3934 கோடிக்கு பா,ஜ,க அரசின். மத்திய  பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரத்தாமுன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இந்த ஒப்பந்தம் வெளியான நிமிடம் முதல் டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் 3-ம் தேதி தஞ்சை நாகை திருவாரூர் மாவட்ட திமுகவின் சார்பில் திருவாரூரில்  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய உத்தரவிட்டிருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த நாளே ஆர்பாட்டம் நடத்த உத்தரவிட்டு இன்று பிரமாண்ட ஆர்பாட்டம் நடந்திருப்பது விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்பாட்டம் நடந்த அதே நேரத்தில் திருவாருரூக்கு கவர்னர் வருகை தந்திருப்பதால் பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

 

dmk

 

ஆர்பாட்டத்திற்கு முன்னாள் மத்திய இனை அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் எம்,பி,ஏ,கே,எஸ்,விஜயன் உள்ளிட்டவர்கள் முன்னின்று நடத்தினர். ஆர்பாட்டத்தில் மதிமுகவை சேர்ந்த சீனிவாசன் பேசுகையில், புராணகாலத்தில் இராமணின் செருப்பை வைத்து ஆட்சி செய்ததாக கூறும் அந்த வம்சாவழியில் ஆட்சி செய்யும் மோடியின் இரண்டு செருப்புகளாக இருந்து ஆட்சி செய்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும், அந்த செருப்புகள் இரண்டும் தமிழக மக்களை நாசமாக்குகிறது. அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று பேசி ஆர்பாட்டத்திற்கு உற்சாகத்தை மூட்டியது, 

 

அடுத்து பேசியவர்கள் அனைவருமே அதிமுக ஆட்சி அழித்தொழிக்கப்படவேண்டும் என்கிற பானியில் பேசினர்.

அடுத்துப்பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம், " காந்தியின் பிறந்தநாளில் மத்திய மோடிஅரசு, தமிழக மக்களுக்கு அளித்துள்ள பரிசு தான் ஹைட்ரோ கார்பன் எனும் நாசகாரத் திட்டம். குஜராத்திலிருந்து மேற்கு வங்கம் வரையில் 7500 கி,மீட்டரும் மரக்காணம் முதல்  கன்னியாக்குமரி வரை 2.40 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க திறந்த வெளி அனுமதி அளித்துள்ளனர்.  முன்பெல்லாம்  பெட்ரோல், மீத்தேன்  உள்ளிட்டவைகளை எடுக்க தனித்தனியாக அனுமதி வாங்கனும். ஆனால் தற்போது எல்லாவற்றிற்கும் ஒரே அனுமதி,அதில் எதை வேண்டுமானாலும் எடுக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடல் மாலை திட்டம் என்ற பெயரில் குஜராத், மரக்காணம், மேற்கு வங்கம் வரை  கடலில் எல்லைகளை கிழிக்க உள்ளனர்.  அவர்களின் அனுமதி இல்லாமல் எல்லையை தாண்ட முடியாத அளவுக்கு  அந்த திட்டத்தை வகுத்துள்ளனர்.  தேசிய நெடுஞ்சாலைகள் எப்படி போடும் போது எப்படியிருந்து தற்போது டோல்கேட் என்கிற பெயரில் அவதிப்படுகிறோமோ அதுபோலத்தால் கடல் எல்லையை தாண்டும் போதும் நடக்கும்.

 

dmk

 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனுமதியை உடனடியாக வழங்கவில்லை, ஆனால் மக்களை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  அறிவிப்பதற்கு முன்பே தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு பசுமை வழி சாலைக்கு நிலத்தை அளவீடு செய்துவிட்டனர். 

 

ஆங்கிலேயே ஆட்சியில் ஜாலியன் வாலாபாத் படுகொலை குறித்து ஜனரல் டயரிடம் இவ்வளவு பேரை  சுட்டுக்கொன்ற நீங்கள் ஏன் அதை நிறுத்தினீர்கள் எனக்கேட்டபோது துப்பாக்கியில் தோட்டா தீர்ந்து விட்டது என்றார். அந்த ஜனரல் டயருக்கும், மக்களை அழிக்கின்ற திட்டங்களை செயல்படுத்த துடிக்கின்ற மோடிக்கும் என்ன வித்தியாசம்.   பாகிஸ்தானில் துள்ளிய தாக்குதலுக்கு முக்கியத்துவம் தருகின்றீர்கள், எல்லையை காப்பது மட்டும் ஒரு பிரமதமருக்கு  முக்கியம் இல்லை. நாட்டின் கலாச்சாரத்தையும் பண்பாட்டை காப்பதும் அந்நாட்டின் பிரதமரின் கடமைகளில் ஒன்று. 

 

தமிழகத்தின் நாகரீகம் 5 ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டிய நாகரீகம், பல்வேறு கடல்கோல்களையும், மொழித்தினிப்புகளையும் தாண்டி தலைசிறந்த நாகரீகமாக  இன்றும் வளர்ந்துவந்துள்ளது. இதனை அழிக்க   ஜனரல் டயரைப்போல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப்போல் எத்தனை  குண்டுகளை கொண்டுவந்தாலும் அதனை  தாங்குவதற்கு எங்களுக்கு நெஞ்சில் உரமிருக்கிறது. பிரதமர் மோடி அவர்கள் இந்த பழமையான கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் அழித்தோம் என்ற அவப்பெயருக்கு ஆளாக வேண்டாம்"  என்று தனக்கே உரிய பானியில் பேசிமுடித்தார்.

சார்ந்த செய்திகள்