நெல்லை மாவட்டம் இசக்கி ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களானஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்கத்தமிழ் செல்வன், அவருடன் எம்.எல்.ஏமாரியப்பன் என்கின்ற கென்னடி, சாத்தூர்சுப்ரமணியம்,பெரியகுளம் கதிர்காமம், காப்புரெட்டிபட்டி பழனியப்பன் என மொத்தம்7 எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ளனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நெல்லையில் செய்தியாளர்களைசந்தித்த தங்கத்தமிழ் செல்வன் பேசுகையில்,
தற்போது வரை 20 எம்.எல்.ஏக்கள் குற்றாலத்துக்கு வந்துள்ளார்கள்.மேலும் பாபநாசம் புஷ்கர விழாவில் கலந்துகொண்டு குற்றாலத்தில் இன்னும் இரண்டு நாட்கள் தங்க உள்ளார்கள்.அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோவுக்கும்தினகரன் ஆதரவாளர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. 18 தகுதி நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்ப்பு வந்த பின்னர் தமிழக அரசியலில் மிக பெரிய மாற்றம் ஏற்படும். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய கூடிய மாற்றம் வரும் மென கூறினார்.