/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hc-art_2.jpg)
தமிழகத்தில் பால், பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்கத் தடையில்லை என விலக்களிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை மறுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை திரும்ப பெறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை உறுதி செய்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.
அப்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை தடை செய்யும் அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், அதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசுதரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில், பால், பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)